ரியாத்தில் உள்ள இலங்கை தூதரக மரம் நடும் விழா
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்து 50 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சு மற்றும் ரியாத் நகரசபையுடன் இணைந்து ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மர நடுகை விழாவை ஏற்பாடு செய்தது. இவ்விழா சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அல் தர்சீனா பூங்காவில் நடைபெற்றது.
"எங்கள் நிலம், எங்கள் எதிர்காலம்" என்ற கருப்பொருளின் கீழ், 2024 டிசம்பர் 2 முதல் 13 வரை சவூதி அரேபியாவில் நடத்தப்படும் ஐ.நா. பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடும் சர்வதேச UNCCD COP16 மாநாட்டின் போது இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், COP 16க்கான இலங்கை பிரதிநிதி குழுவில் உறுப்பினர்களான நில்மினி விக்கிரமாராச்சி, இலங்கையின் சுற்றாடல் அமைச்சின் ஹிமாலி டி கோஸ்டா மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் துலான்ஜி ஹேரத் ஆகியோருடன் இணைந்து பூங்காவில் மரங்களை நட்டார்கள்.
தூதரக ஊழியர்கள், ரியாத்தில் உள்ள இலங்கை சமூகத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள், இலங்கை சர்வதேச பாடசாலையின் அதிபர் மற்றும் மாணவர்கள், மற்றும் ரியாத் நகரசபையின் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இந்த முயற்சிக்கு ரியாத் நகரசபையின் தன்னார்வ சேவைகளின் பணிப்பாளர் காடா பின்த் அப்துல்லா அல்-ஒம்ரான் அவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
சவூதி பசுமைப் புரட்சிக்கு ஆதரவாகவும் (SGI) ஒரு இரு நாடுகளின் 50வது ஆண்டு இராஜதந்திர உறவுகளைக் குறிக்கும் முகமாகவும் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்ததாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் தூதுவர் அமீர் அஜ்வத், சுட்டிக்காட்டினார்.
இலங்கை தூதரகம்
ரியாத்
Post a Comment