இனவாத சக்திகள் அநுரகுமாரவிற்கு எதிராக அணிதிரள்வு
கடந்த தேர்தலில் குப்பையில் இடப்பட்ட இனவாத சக்திகள் மீண்டும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக அணிதிரளுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரால் வெளியிடப்பட்டுள்ள காணொளியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து விடுமோ என்ற அச்சத்தில் கடந்தகால அரசியல் இனவாதிகள் அநுரவிற்கு எதிராக ஒன்று திரண்டு இனவாத கருத்துக்களை பரப்புகின்றனர்.
எனினும், தற்போதைய அரசாங்கம், அவர்களுக்கு வாக்களித்த வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் இதுவரை உறுதியளிக்கவில்லை.
இந்தநிலையிலும், சிலர் தங்கள் சுயலாபத்துக்காக இனவாதக் கருத்துக்களை நாட்டில் பரப்பி வருகினறனர் என்றுள்ளார்.
Post a Comment