Header Ads



வரலாற்றில் முதன் முறையாக இன்று, புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை


கொழும்பு பங்குச் சந்தை இன்று -23- மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.


அதன்படி, இன்று முற்பகல் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதன் முறையாக 15 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது


மதியம் 12 15 வரையில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண், 247.44 புள்ளிகளைப் பெற்று 15 ஆயிரத்து 58.14 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.


அத்துடன், எஸ் அன்ட் பி எஸ்எல் 20 பங்கு விலைச் சுட்டெண் இன்று மதியம் 12.15 வரையில் நான்காயிரத்து 509.22 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது.


அதன்படி, மொத்த புரள்வு 5.55 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.


No comments

Powered by Blogger.