Header Ads



இரத்த உறவுகளால் கொலை செய்யப்பட்ட இளைஞன்


பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் தடிகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


நேற்று (30) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.


உயிரிழந்தவர் தனது மகள், தந்தை மற்றும் இளைய சகோதரருடன் குறித்த பகுதியில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது, தந்தை மற்றும் சகோதரனுடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் இருவரும் தடிகள் மற்றும் கற்களால் தாக்கி இந்த கொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடைய 46 மற்றும் 18 வயதுடைய தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.