Header Ads



அநுரகுமாரவின் அரசாங்கத்திற்கு பிரிட்டன் பாராட்டு


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடு சரியான பொருளாதாரத் திசையில் சென்று கொண்டிருக்கின்றது என இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக்  தெரிவித்துள்ளார்.


அத்துடன் இலங்கையில் வர்த்தக வாய்ப்புக்களை ஆராய்வதற்காக பிரிட்டன் வணிகத் தலைவர்கள் குழு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது என்றும் அவர் கூறினார்.


நிதி அமைச்சில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவுக்கும் பிரிட்டன் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


இந்தச் சந்திப்பில் பிரிட்டன் உயர்ஸ்தானிகர், தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆழமாகக் கலந்துரையாடினார்.


அரசு ஆட்சியைப் பொறுப்பேற்றதிலிருந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் மேற்கொண்ட விரைவான முன்னேற்றத்தையும் அவர் பாராட்டினார்.


இலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் குறித்தும், எதிர்கால முன்னெடுப்புக்கள் குறித்தும் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெளிவுபடுத்தினார்.


இலங்கைப் பொருட்களின் ஏற்றுமதியை, குறிப்பாக சேதன விவசாயப் பொருட்கள், ஆடைகள், இயற்கை அழகு சாதனப் பொருட்களைப் பிரிட்டன் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிப்பதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டார்.


அத்துடன், சர்வதேச இறையாண்மை கடன் பத்திரங்களை மறுசீரமைப்பதில் இலங்கையின் முயற்சிகளையும், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை திறம்பட செயற்படுத்துவதையும் உயர்ஸ்தானிகர் வெகுவாகப் பாராட்டினார்.



No comments

Powered by Blogger.