Header Ads



மன்மோகனுக்கு, மகிந்த வழங்கியிருந்த வாக்குறுதி


மறைந்த மன்மோகன் சிங் இந்தியாவின்  பிரதமராக இருந்த காலத்தில் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மகிந்த ராஜபக்சவிடமிருந்து பெற்றிருந்தார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் (வயது 92) மறைவுக்கு எமது மனப்பூர்வமான அஞ்சலிகள்.


அவர் இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தார்.


2011 இல் அப்போதைய  இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான கூட்டறிக்கையில் “13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும்” என்ற வாக்குறுதியைப் பெற்றவர்.

No comments

Powered by Blogger.