Header Ads



அவமானத்தால் அஸ்வின் ஓய்வை அறிவித்திருக்கலாம்


இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.


இந்தப் போட்டியானது வெற்றிதோல்வி இன்றி முடிவடைந்தது.


3ஆவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


இது சக வீரர்கள் உள்பட இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அஸ்வின் ஓய்வு குறித்து முன்னாள் ,தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டித் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று -19- சென்னை வந்தடைந்தார்.


அவுஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் இரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இந்நிலையில் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என அவரது தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


அவர் கூறுகையில் - இந்திய டெஸ்ட் அணியின் முதல்தரச் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது.


டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக விளையாடிய போதும் அணியில் இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்.


இந்திய அணியில் விளையாடிய போது அஸ்வின் அவமானப்பட்டு இருக்கலாம்.


கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம்.


எனினும் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது தனிப்பட்ட முடிவு அதனால் அதில் தலையிட முடியாது.


என அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் கூறினார்.

No comments

Powered by Blogger.