லாப்ஸ் கேஸ் குறித்து, அமைச்சரின் எச்சரிக்கை
LP எரிவாயுவை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்க லாஃப்ஸ் கேஸ் தவறினால் அரசாங்கம் அது குறித்து தீர்மானம் எடுக்கும் என வர்த்தகம், , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று -01- தெரிவித்தார்.
லிட்ரோ எரிவாயு மூலம் விநியோகிக்கப்படும் எல்பி எரிவாயுவிற்கு தட்டுப்பாடு இல்லை என அவர் தெரிவித்தார்.
'எங்கள் நாட்டில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எல்பி எரிவாயு நிறுவனங்கள் உள்ளன. லிட்ரோ எரிவாயுவிற்கு தற்போது தட்டுப்பாடு இல்லை. லாஃப் கேஸ் சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கான காரணங்களை விளக்க வேண்டும்.
லாஃப் எரிவாயுவை இறக்குமதி செய்து வழங்குவதில் தலையிடத் தவறினால், அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். லிட்ரோ எரிவாயுவில் ஏராளமான கையிருப்பு உள்ளது. நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண காஸ் சிலிண்டர்களை மாற்ற வேண்டும் என்றால், அது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்,'' என்றார்.
Post a Comment