Header Ads



கொற்றாமுள்ள Access international பாலர் பாடசாலையின் 19 ஆவது கழை நிகழ்ச்சி, பரிசளிப்பு விழா


ரிஸ்வான் ஹம்சியா தலைமையில் கொற்றாமுள்ள பகுதியில் இயங்கி வரும்  Access international பாலர் பாடசாலையின் 19 ஆவது கழை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை   பகல் ஒன்று முப்பது மணி அளவில் நாத்தாண்டிய பிரதேச சபை கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. 


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹீருனி விஜயசிங்கஹ, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு மொஹமட் பைசல்,   ஜனாஸா பவுண்டேஷனின் தலைவர்  ஹுசைன் ரஷாட், Fn Media Network நிறுவனத்தின் உரிமையாளரும் சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சியின் குருணாகல் மாவட்ட செய்தியாளரும் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஊடகப் பணிப்பாளரும் மக்களின் மகிழ்ந்தன் தேச மானிய தேச கீர்த்தி  2024 ஆம் ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் மூலம் மனித சிறப்பு தங்க விருதினை பெற்ற ஊடகவியலாளர் A W M FASLAN உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் உறுப்பினர்கள்,குழந்தை பருவ கல்வி மேம்பாட்டு அதிகாரி நிரோஷன், குழந்தை பருவ கல்வி மேம்பாட்டு அதிகாரி திருமதி சந்தமாளி , இளம் ஊக்கமளிக்கும் பேச்சாளர் மற்றும் டிஜிட்டல் படைப்பாளர் voice of raaz திரு மொஹமட் சிராஸ், அல் ஹிரா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு M சப்ராஸ், அல் ஹிக்மா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு M L MAJIDH, A M ROYAL PRODUCTION AND ACADEMY நிர்வாகி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்மா முஸ்தாக் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் Access இன்டர்நேஷனல் பாலர் பாடசாலையின் அதிதிகளாக கலந்து கொண்டனர். 


இதன் போது Access இன்டர்நேஷனல் பாலர் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பாடசாலை புத்தகப் பை மற்றும் பணத்தொகை மற்றும் பரிசல்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. 


சிறார்களின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் பல கழை நிகழ்வுகள் போட்டி நிகழ்ச்சிகள், ஆங்கில மொழியின் பெறுமதியை உணர்த்தும் வகையில் Access இன்டர்நேஷனல் பாலர் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு விஷேட விளையாட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இறுதியாக போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற Access இன்டர்நேஷனல் பாலர் பாடசாலையின் மாணவ மாணவிகளுக்கு பரிசல்கள் பதக்கங்கள் மற்றும் விருதுகள் விசேட அதிதிகளின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.



No comments

Powered by Blogger.