(அந்நாளில், அது (இந்த பூமி) தன் தகவல்களை ஒப்புவிக்கும்) அல்குர்ஆன் : 99:4
(அந்நாளில், அது (இந்த பூமி) தன் தகவல்களை ஒப்புவிக்கும்.!) 📖 அல்குர்ஆன் : 99:4
நாம் வாழும் இந்த நிலம் வெறும் மண்ணும் மணலும் கல்லுமல்ல! இது தெய்வீக நீதிமன்ற வளாகம்.
நீ அறம் செய்த நிலமெல்லாம் உன் சார்பாக வாதிட காத்திருக்கும் வழக்கறிஞர்கள். நீ பாவம் செய்த நிலமெல்லாம் உனக்கு எதிராக வாதிட காத்திருக்கும் வழக்கறிஞர்கள்.
ஆதலால்,,,
நீ செல்லும் இடமெல்லாம் ஒரு சிரம் பணிதலை பதித்துவிட்டு.!
நீ தரிசிக்கும் ஊரெல்லாம் ஒரு தானத்தை வழங்கிவிடு.!
நீ போகும் நாடெல்லாம் ஒரு தரும காரியத்தை செய்துவிடு.!
நீ நடக்கும் பாதைகளில் எல்லாம் ஒரு (தஸ்பீஹ்) துதிபாடலை பாடிவிடு.!
நல்லறத்தாலும் நல்வழிபாட்டாலும் உன் சாட்சிக்காரர்களை குவித்துக்கொள்.!
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment