டிசம்பர் 6 - பாபரி மஸ்ஜித் மத வெறியர்களால் தகர்க்கப்பட்ட தினம்
இந்திய வரலாற்றின் பக்கங்களில் மகாத்மா காந்தியின் படுகொலைக்குக் பிறகு பதியப்பட்ட மாபெரும் ஜனநாயக படுகொலை செய்யப்பட்ட தினம் டிசம்பர் 6.
நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மசூதியாக தொழுகை நடத்த பயன்படுத்தி வந்த பாபரி மஸ்ஜித் தகர்த்து தரைமட்டமாக்கிய தினம்.
பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நாடு முழுவதும் பாஜக தலைவர் அத்வானி ரதயாத்திரை நடத்தி லட்சம் கரசேவகர்களுடன் அயோத்தி யில் நுழைந்து நீதிக்கு சவால் விட்ட தினம்..
சங்க பரிவார தலைவர்கள் உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கத்தியாரின் வெறுப்பை உமிழ்ந்து வெறியூட்டும் பேச்சுக்கள் மூலம் ஏற்பட்ட கலவரத்தால் வட மாநிலங்களில் அப்பாவி முஸ்லிம்கள இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களின் இன்னுயிரை காவு கொண்ட கறுப்பு அத்தியாயம் எழுதிய தினம்..
பாபா மசூதியை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளயும் மேற் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் அன்றைய உபி முதல்வர் கல்யாண்சிங் பிரதமர் நரசிம்ம ராவ் ஆகியோர் அளித்த வாக்குறுதியை மீறி காவல்துறையும் இராணுவமும் பார்வையாளர்களாக மட்டுமே நின்று மசூதி இடிப்புக்கு துணை நின்ற தினம்..
ஆனாலும் நாங்கள் நம்புகிறோம்
ஆளுபவர்களையும் ஆளும்
ஆண்டவன் மீண்டும் அருள் புரிவான்.
நியாயம் கிடைக்கும் வரை
நித்தம் கனன்று கொண்டிருக்கும்
நினைவுகளாய் பாபரி...
இறையில்லம் எழும்பும் ஒரு நாள்
இறைவனை சுஜூது செய்ய...
Post a Comment