Header Ads



5 வது ரேங்குடன் சாதனை


நவம்பர் மாதம் நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான அகில இந்திய பட்டய கணக்காளர் C.A.தேர்வின் முடிவுகள் இரண்டு தினங்கள் முன்பு வெளியானதில், கேரள மாநில அளவில் முதல் ரேங்க் மற்றும் அகில இந்திய அளவில் 5வது ரேங்குடன் அம்ரத் ஹாரிஸ் தேர்ச்சி பெற்றுள்ளார்.


ஷார்ஜா தனியார் நிறுவனத்தில் முதன்மை கணக்காளராக பணியாற்றும் ஹாரிஸ் பைசல் - ஷீபா தம்பதியரின் மகள்.


பள்ளி கல்லூரி படிப்பு முழுவதும் ஷார்ஜாவில் பயின்ற அம்ரத் ஹாரிஸ் அரபுலகின் பிரபலமான கணக்காளர் நிறுவனமான Kreston Menon & Co., 


C A Academy ல் பயிற்சி மேற்கொண்டு பிப்ரவரி மாதம் இன்டர்மீடியட் 13வது ரேங்குடன் தேர்ச்சி பெற்றவர் தற்போது இறுதித் தேர்வில் கேரள மாநில முதல் ரேங்க் மற்றும் அகில இந்திய அளவில் 5வது ரேங்குடன் சாதனை படைத்து Chartered Accountant ஆக பணியை துவங்கவுள்ளார்..


வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்..


Azheem

No comments

Powered by Blogger.