Header Ads



சாமர சம்பத்திற்கு எதிராக 500 இலட்சம் கோரி வழக்குத் தாக்கல்


முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக 500 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த வருடம் எப்பாவல பொஸ்பேட் நிறுவன வளாகத்தில் வழங்கல் அதிகாரியாக கடமையாற்றிய எஸ்.ஏ.அபேசிறி என்ற உத்தியோகத்தரை மற்றுமொரு நபர் தாக்கி அச்சுறுத்திய சம்பவத்தை அடிப்படையாக கொண்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 


எப்பாவல பொஸ்பேட் நிறுவன வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில்  சாமர சம்பத் தசநாயக்க நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்.


இதன்போது அவர், குறித்த அதிகாரியை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.


இந்நிலையில், சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அந்த அதிகாரி முன்னாள் அமைச்சருக்கு எதிராக நட்டஈடு கோரி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.


மேலும்,  தாக்குதல், அச்சுறுத்தல், திட்டமிட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் மற்றும் பொது ஊடகங்களுக்கு முன்பாக அறிக்கைகளை வெளியிட்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தம்மை அவதூறாகப் பேசி அவமானப்படுத்தியதாக அத்தனகல்ல மாவட்ட நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட அதிகாரி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.


அத்தோடு, அவரது நற்பெயர் மற்றும் அரசாங்க நிர்வாக அதிகாரி என்ற அவரது சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்து 500 இலட்சம் அபராதமாக கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.