இலங்கை வளிமண்டல திணைக்கள இணையம் மீது சைபர் தாக்குதல் - தற்போது 3ஆம் தரப்பின் கட்டுப்பாட்டுக்குள்
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மீண்டும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளம் தற்போது 3ஆம் தரப்பின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது இணையத்தளத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.meteo.gov.lk/ கடந்த நவம்பர் 01ஆம் திகதி சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அது மீள இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 12ஆம் திகதியும் அதன் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மீட்கப்பட்டதாக, இலங்கை கணனி அவசர பதிலளிப்பு மன்றம் (CERT) தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மீண்டும் குறித்த தளத்தின் மீது சைபர் ஊடுருவல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment