34 வருட சேவையில் இருந்து ஓய்வுபெற்ற, அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் பாராட்டி கௌரவிப்பு
புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (காசிமி , மதனி) தனது சேவையிலிரிந்து ஓய்வு பெற்றார். அன்னாரின் 34 வருட தொடர் சேவையைப் பாராட்டி கௌரவித்து கல்லூரி பழைய மாணவர் அமைப்பாகிய சில்சிலதுல் காசிமிய்யீனினால் , அதன் வருடாந்த அங்கத்தவர் பொதுக் கூட்டத்தின்போது விருது வழங்கப்பட்டது. அத்துடன் துருக்கி உலுடக் பல்கலை கழகத்தில் கலானிதி பட்டம் பெற்ற முதல் காசிமி அஹ்மத்ஷா அஹ்மத் ஜம்ஷாத் அவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கல்லூரியின் மஹ்மூத் ஹஸரத் மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பழைய மாணவர்கள், மாணவர்கள் , உஸ்தாத்மார்கள், தர்மகர்தா சபையினர், முகாமைத்துவக் குழுவினர் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment