கூடாரத்திற்குள் கடும் குளிர், காசாவில் 2 ஆவது குழந்தை உயிரிழப்பு
தெற்கு காசா பகுதியின் கான் யூனிஸ் நகரில் உள்ள மவாசி பகுதியில் குளிர்ந்த காலநிலை காரணமாக இரண்டு பாலஸ்தீன சிசுக்கள் உயிரிழந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த 11 நாட்களே ஆன பாலஸ்தீனக் குழந்தை ஆயிஷா அல்-கஸ்ஸாஸ் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அவரும் அவரது குடும்பத்தினரும் தஞ்சம் அடைந்த கூடாரத்தில் குளிர்ந்த காலநிலையால் இன்று இறந்த பாலஸ்தீனிய குழந்தை Sila Al-Faseh உயிரிழந்தது.
காசாவில் நடந்து வரும் இனப்படுகொலையின் தொடக்கத்தில் இருந்து கடுமையான இஸ்ரேலிய முற்றுகைக்கு மத்தியில், அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை மற்றும் குளிர்காலத்தின் தொடக்கத்தின் காரணமாக காசா பகுதி முழுவதும் குழந்தைகள் மனிதாபிமானமற்ற நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment