Header Ads



2 பேருக்கு மேல், ஒரு மோட்டார் சைக்கிளில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்


- பாறுக் ஷிஹான் -


நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதால் பின்வரும் நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு நிந்தவூர் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.


எனவே இதனை கருத்தில் கொண்டு கட்டாயம் இரண்டு பேருக்கு மேல் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்

சிறுபராயத்தினர் மற்றும் முறையான சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவர்களுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டுவதற்கு வழங்குகின்றவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


தலைக்கவசம் இன்றியும் அதிக வேகத்துடனும் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்


No comments

Powered by Blogger.