Header Ads



மீட்கப்பட்ட 2 சிறுத்தைக் குட்டிகள் - அலைந்து திரியும் பெரிய சிறுத்தை


நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்ட தேயிலை மலையில்  இருந்து இரண்டு சிறுத்தைக் குட்டிகள் செவ்வாய்க்கிழமை (24) காலை  மீட்கப்பட்டதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.


அந்த தேயிலை மலையில் ஆண் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது   இரண்டு குட்டிகள் இருப்பதை கண்டு தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர் இந்த இரண்டு குட்டிகள் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து இந்த இரண்டு குட்டிகளும் மீட்கப்பட்டுள்ளது.


இந்த  இரண்டு குட்டிகளையும்   தாய் சிறுத்தை திங்கட்கிழமை (23)  ஈண்டெடுத்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிப்பதோடு மீட்ட இரண்டு சிறுத்தை குட்டிகளையும் அதே இடத்தில் வைக்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் குறித்த தேயிலை மலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அறிவித்ததாக தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


இரண்டு குட்டிகளும் காணப்பட்ட பகுதியில் பெரிய சிறுத்தை   ஒன்று அலைந்து திரிவதாகவும் அந்த பகுதிக்கு சென்று தொழில் புரிய முடியாத சூழ் நிலை காணப்படுவதாக  தொழிலாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.


எனவே, இது தொடர்பாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சென்ஜோன் டிலரி மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுகின்றனர்.


எஸ். சதீஸ்

No comments

Powered by Blogger.