Header Ads



பிறக்கும் போதே 2 கண் பார்வைகளை இழந்தும், அல்குர்ஆனை மனனமிட்டு ஹாபிழாகிய அப்துல்லாஹ்


( முஹம்மத் மர்ஷாத் )


மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்‌ மாவடிப்பள்ளியைச் சேர்ந்த பிறவியிலேயே தனது இரு கண் பார்வையை இழந்து, இந்த உலகத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் இந்த உலகம் என்னை பார்க்க வேண்டும்" என்ற ஒரு குறிக்கோளோடு அல்-குர்ஆனை மனனம் இட்டு ஹாபிழாக பட்டம் பெற்றுள்ள அல்ஹாபிழ் அப்துல் அமீர் அப்துல்லாஹ் அவர்களை பாராட்டி , கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாவடிப்பள்ளி பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மனாப் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்கள் , உலமாக்கள், புத்தி ஜீவிகள், மசூரா சபை உறுப்பினர்கள் , நலன்விரும்பிகள் மற்றும் ஊர்மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.






No comments

Powered by Blogger.