Header Ads



பைசர் தேசியப்பட்டியிலில் புகுந்த விதம் - 2 பக்கக் கடிதம் வெளியானது


புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டணிக் கட்சிகளின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டமை தொடர்பில் கட்சியின் செயலாளர் ஷியாமலா பெரேரா விளக்கமளித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு அமையவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ள தரப்பினரிடையே பொதுவான உடன்பாட்டை எட்டுவதற்கான போக்கு இல்லாததால் பெரும்பான்மை ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.


இதன்படி, ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தேசியப்பட்டியல் வெற்றிடத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் பெரும்பான்மையான கட்சிகளின் தீர்மானமாக தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





No comments

Powered by Blogger.