Header Ads



வானிலையில் 24 மணித்தியாலத்தில் ஏற்படவுள்ள மிகப்பெரிய மாற்றம்


தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


குறித்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வடக்கு கரையை அண்மித்து தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


இதன்படி, வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஏனைய பகுதிகளில் இரவு வேளையில் மழை பெய்யக்கூடும்.


மத்திய, சபரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

No comments

Powered by Blogger.