24 மணிநேரத்தில் 8747 பேர் கைது
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மதுபோதையில் வாகனத்தை செலுத்தாமல், வீதிச் சட்டத்திட்டங்களை முறையாக கடைப்பிடிக்குமாறும் பொலிஸ் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
Post a Comment