Header Ads



180 பேருடன் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்


நோர்வே ஒஸ்லோவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் நோர்வேயில் உள்ள டார்ப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


விமானத்தில் 180க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .


ஓஸ்லோவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணித்த பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டார்ப் விமான நிலையத்தில்அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், விமானத்தில் இருந்த 176 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அதே நேரத்தில் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.


முன்னதாக, தென் கொரியாவின் விமான விபத்தில் 179 பேர் இறந்துள்ளதைத் தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் நடந்துள்ளது.


மேலும், ஏர் கனடா விமானம் ஒன்று அதன் தரையிறங்கும் கருவியில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, ஹாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.