14 வயது மாணவனிடம் 30 லட்சம் பணம் மோசடி - எப்படி நடந்தது...?
களுத்துறை, பயாகல பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவனிடம் கையடக்க தொலைபேசி வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மோசடி சம்பவம் தொடர்பில் இருவரை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
18 வயது மற்றும் 21 வயதுடைய ஏத்தகம மற்றும் மங்கோன ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது தந்தை மற்றும் இரண்டு மூத்த சகோதரிகளுடன் பயாகல பிரதேசத்தில் வசித்து வந்த மாணவனுக்கு தனது தந்தையினால் வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசி தொலைத்துவிட்டது.
இந்த நிலையில் அயல் வீட்டில் வசிக்கும் அதே வயதுடைய நண்பரின் மூத்த சகோதரனிடம் கையடக்கத் தொலைபேசி ஒன்றை கோரியுள்ளார்.
அதற்காக கொஞ்சம் பணம் அல்லது தங்கப் பொருட்களை தருமாறு இந்த மாணவனிடம் கூறினார்.
இதன்படி குறித்த மாணவன் அலமாரியில் இருந்த சுமார் 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மோதிரம், காதணிகள், வளையல்கள், போன்றவற்றை சந்தேக நபருக்கு மூன்று தடவைகளில் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேக நபர் அவற்றை இரண்டு இடைத்தரகர்கள் மூலம் மூன்று முறை அடமானம் வைத்து, சுமார் 17 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார்.
மேலும் மாணவருக்கு ட்ரோன் கேமராக்கள், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள், ஆடைகள் ஆகியவற்றையும் கொடுத்துள்ளார்.
தங்கப் பொருட்களை வைத்திருந்த உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். விற்ற மற்றும் அடகு வைக்கப்பட்ட தங்கப் பொருட்கள் விசாரணைகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment