தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 100 L மற்றும் 100.1 L இடையே கொட்டாவையில் இருந்து பாலட்டுவ நோக்கிச் சென்ற கார் ஒன்று, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் அதே திசையில் பயணித்த லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு மகள்கள் படுகாயமடைந்ததுடன், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் ஒருவர் உயிரிழந்தார்.
மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 10 வயது சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment