Header Ads



பரிதாபகரமான நிலையில் முள்ளிவாய்க்காலில், கரையொதுங்கிய 103 மியன்மாரியர்கள்


முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன்    படகொன்று   வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது.


மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும்  உள்ளடங்கியிருக்கின்றனர்.


அவர்களை  மீட்டு கரைக்கு  கொண்டுவரும் நடவடிக்கையில்  முல்லைத்தீவு மீனவர்கள்,  கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


குறித்த படகில் இருப்பவர்களுக்கு  உணவுகள், உலருணவுகளை  முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர்  வழங்கினர். படகில் இருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயீனமுற்ற நிலையிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.