Header Ads



நச்சுக் கருத்துகளை பரப்பும் எலான் மக்ஸ் - X இல் இருந்து விலகிய 200 ஆண்டு பழமையான The Guardian


200 ஆண்டுகாலம் பழமையான பிரிட்டிஷ் நாளிதழான The Guardian இனி எக்ஸ் தளத்தில் எதையும் பதிவிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் X தளத்தின் வாயிலான அதன் CEO எலான் மக்ஸ் தொடர்ந்து நச்சு கருத்துகளை பரப்பி வந்ததே இந்த முடிவுக்கு காரணம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இலண்டனில் பாரம்பரியமிக்க The Guardian நாளிதழ் இனிவரும் காலங்களில் X தளத்தில் எந்தவொரு பதிவும் பகிரப்படாது என்றும், தங்கள் செய்தியாளர்களின் பயன்பாட்டுக்காக தங்களின் கணக்கு மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The Guardian நாளிதழுக்கு சொந்தமாக 30இற்கும் மேற்பட்ட கணக்குகள் உள்ளன. இவற்றை சுமார் 2 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்தும் The Guardian கட்டுரைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


1821ஆம் ஆண்டு இலண்டனில் Manchester Guardian என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நாளிதழ் பின்னர் 1959ஆம் ஆண்டு The Guardian என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.