Header Ads



SJB யில் இழுபறி தொடருகிறது - ஹிருணிக்காவும் களத்தில் குதிப்பு


(அததெரண) 


நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஊடாக உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட கட்சிகள் இதுவரையில் குறித்த தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வழங்கவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பெயர்களை அனுப்பி வைத்ததன் பின்னர் வர்த்தமானியில் பெயர்கள் வெளியிடப்பட உள்ளன.


இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் 4 தேசியப்பட்டியல் உறுப்பினர்களுக்கான இடமும், புதிய ஜனநாயக முன்னணியின் ஒரு உறுப்பினருக்கான இடமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினருக்கான இடமும் இதுவரையில் பெயரிடப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் கிடைத்துள்ளதுடன், அதில் ஒரு இடத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் பெண் உறுப்பினர் ஒருவருக்கு இடம் வழங்கப்படுமானால், அதற்கான முழுத் தகுதியும் தனக்கு உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.