Header Ads



SJB யில் மாற்றம் வருமா..?


புதிய அரசியல் மற்றும் புதிய உலகின் சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி  மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்று அதன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இன்று (16) தெரிவித்தார்.


"கட்சி நிர்வாக முறையை அறிமுகப்படுத்த வேண்டும் மற்றும் சரியான நபர்களை சரியான பதவிகளுக்கு நியமிக்க வேண்டும்" என்று பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக இருந்த சஜித் பிரேமதாச பெற்ற 4.2 மில்லியன் வாக்குகளுடன் ஒப்பிடுகையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 1.9 மில்லியன் வாக்குகளையே ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுள்ளதால், ஏனைய கட்சிகளைப் போன்று ஐக்கிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது.


நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசியப்பட்டியல் மூலம் ஐவர் என மொத்தம் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களையே பெற்றுள்ளது.


இதேவேளை கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட கணிசமாக குறைந்துள்ளது.


2020 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 305,744 வாக்குகளை பெற்றிருந்தார். எனினும், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அவரால் 145,611 வாக்குகளையே பெற முடிந்தது.

No comments

Powered by Blogger.