Header Ads



பள்ளிவாசலில் விஜித ஹேரத், NPP க்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி, மக்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பு

 
- Riyas Farook -


வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட கௌரவ பாராளுமன்ற அங்கத்தவர்களான ரியாஸ் பாரூக், பஸ்மின் ஷரீப், தனுர திசாநாயக்க ஆகியோர் இன்று 2024 நவம்பர் மாதம் 22 ஆம் திகதி மாலை அக்குரணை அஸ்னா மத்திய மஸ்ஜிதுக்கு ஒரு சிநேகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர். 


இதன் போது கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் அக்குரணை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் நன்றி தெரிவித்ததோடு, வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் கோரினார். 


பொது மக்களின் கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார். இந்நிகழ்வில் அக்குரணை தேசிய மக்கள் சக்தி அங்கத்தவர்கள், அக்குரணை மஸ்ஜித் சம்மேளன அங்கத்தவர்கள், மற்றும் அக்குரணை ஜம்இய்யதுல் உலமா சபை சார்பில் அதன் தலைவர் மௌலவி ஷியாம் (யூசுபி) உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.




No comments

Powered by Blogger.