’’சிறுபான்மை எம்.பிக்களை இணைக்க NPP தயார்’’ - தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கும்
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர், புதிய பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வெல்வதில் NPP 'மிகவும் நம்பிக்கையுடன்' இருப்பதாகவும் ஆனால் அரசியல் சூழலை வலுப்படுத்துவதற்காக முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைக்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஹேரத் கூறினார்.
எவ்வாறாயினும், தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான இவ் அழைப்பு இச் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுமே தவிர ஐக்கிய மக்கள் ச்கதி (SJB) மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரடகளுக்கு (UNP) அல்ல என்று அவர் கூறினார்.
“தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களுடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசிக்க நாங்கள் தயாராக உள்ளோம், ஏனெனில் இதன் மூலம் இந்த நாட்டில் நாம் இலக்காகக் கொண்ட தேசிய ஐக்கியத்தை உண்மையாகவே அடைய முடியும். எனினும் ஐக்கிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் கூட NPP யால் அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதுடன் அனைத்து சமூகங்களுக்காகவும் சேவையாற்ற முடியும் என்பதையும் நான் கூற விரும்புகிறேன். " என்று ஹேரத் கூறினார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த வாரங்களில் தனது பாராளுமன்ற வேட்பாளர்களுக்கான பிரச்சார உரைகளில் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் NPP மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என நம்புவதாகக் குறிப்பிட்டு, இது வலுவான, சக்திவாய்ந்த அரசாங்கத்திற்கான நேரமே தவிர, வலுவான எதிர்க்கட்சியை அமைப்பதற்கான நேரமல்ல அல்ல என்று கூறினார்.
Post a Comment