Header Ads



ஒரு லட்சம் ரூபாயுடன் Mp யான, NPP உறுப்பினர் குறிப்பிட்டுள்ள விடயங்கள்


பொது தேர்தலில் வெற்றி ஈட்டுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டதாக வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) சார்பில் போட்டியிட்டு தெரிவான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


தாம் இதற்கு முன்னர் செயல்பாட்டு அரசியலில் பங்கேற்றது கிடையாது எனவும் பிரதேச சபை ஒன்றை கூட தாம் பிரதிநிதித்துவம் செய்தது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மக்களுக்காக தாம் நாடாளுமன்றம் செல்வதாகவும் இது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் எப்பொழுதும் எதிர்பார்த்ததே கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.


இம்முறை பொது தேர்தலுக்காக தான் தனிப்பட்ட ரீதியில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.


தமது அரசாங்கம் மக்களுக்கு சேவைகளை செய்ய தவறினால் கடந்த அரசாங்கங்களை விட வேகமாக மக்கள் தம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறும் சிறப்புரிமைகளில் சில வேலைகளில் அதிகார பூர்வ இல்லம் ஒன்று தமக்கு தேவைப்படும் எனவும் அதற்காக விசேடமாக கோரிக்கைகள் எதையும் தாம் விடுக்கவில்லை எனவும் சட்டத்தரணி துஷாரி தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.