Header Ads



ரணில் இருந்திருந்தால் IMF இன் மூன்றாவது கடனுதவி தற்போது கிடைத்திருக்கும்


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மூன்றாவது கடனுதவி தற்போது கிடைத்திருக்கும் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.


காலியில் நேற்று (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


வரவு செலவுத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினாலும் சர்வதேச நாணய நிதியத்தின் தவணை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றது. மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் கொண்டு வரப்படும் இந்த அரசியலமைப்பு இன, மத நிலையை மாற்ற முயற்சிக்குமா என்பது சந்தேகமே.


ஐ.எம்.எப் கடன் தவணை அடுத்த வாரம் நிறைவேற்றப்படாது. ஆனால் அதன் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம்  இலங்கை வர உள்ளது என்று குறிப்பிட்டார். 


மேலும், அரசாங்கம் நாடு மீண்டும் திவாலாகும் வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் தேர்தல் வெற்றிக்கான முடிவுகளையே எடுத்துள்ளனர்.


அதனால்தான் வரவு - செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தாமல் தேர்தல் நடத்தப்படுவதோடு, அவர்கள் தங்கள் எதிர்கால நிகழ்ச்சி நிரலில் வரவு - செலவுத் திட்டத்தை முன்மொழிந்திருந்தால், சர்வதேச நாணய நிதியம் குறித்த நிகழ்ச்சி நிரலைப் பார்த்து முடிவுகளை எடுத்திருக்கும் என்றும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.