போர்க் குற்றங்களுக்காக நெதன்யாகு, கேலண்ட் ஆகியோருக்கு ICC கைது வாரண்ட்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோகவ் கேலண்ட் மற்றும் ஹமாஸின் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு எதிராக பிடிவிராந்து பிறப்பித்துள்ளது.
இதில், முகமது டெய்ஃப் கொல்லப்பட்டுவிட்டதாக கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் அறிவித்திருந்தது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரின் போது இவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதை நம்புவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எனினும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment