இந்தச் செய்தியை படித்ததும், குண்டுகளால் தாக்கப்பட்டவன் போல உணர்ந்தேன் - Dr Farook Abdulla
- Doctor Farook Abdulla -
இந்த நாள் இப்படித் தான் அடங்க வேண்டும் என்று முடிவாகியிருக்கும் போலிருக்கிறது.
இந்தச் செய்தியை முதலில் படித்ததும், ஷெல் குண்டுகளால் தாக்கப்பட்டவன் போல உணர்ந்தேன். பிறகு மனதைத் தேற்றிக் கொண்டேன்.
ஆம் இவ்வுலகில் எதுவும் நிலையில்லை என்பது மட்டுமே நிலையானது.
சகோதரி சாய்ரா பானுவும் ஏஆர்ஆரும் இல்லற பந்தத்தில் இணைந்து மூன்று பத்து வருடங்களை நிறைவு செய்ய இருக்கும் இந்தத் தருணத்தில் பெண்மணியாக சகோதரி சாய்ரா பானு அவர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு முழுக்க முழுக்க அவரது சொந்த முடிவு.
அதை நாம் எள்ளிநகையாடவோ, எதிர்க்கேள்வி கேட்கவோ, தவறாக சித்தரிக்கவோ தேவையில்லை. உண்மையில் இந்த முடிவை நாம் ஆதரிக்க வேண்டும்.
மனதுக்கு ரணமாக இருப்பினும், நல்லமுறையில் பிரிந்து செல்ல இவர்கள் எடுத்த முடிவை நாம் ஆதரித்து ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.
இதில் காரணங்களைத் தோண்டித் துலாவுவது , புரளிகளைப் பரப்புவது அனைத்தும் அநாகரீகம்.
இது அவர்களுக்கு இடையே நிகழ்ந்துள்ள தனிப்பட்ட விசயம், எனவே ஏஆர்ஆரின் விரும்பிகளான நாம் எப்போதும் கண்ணியத்தை மட்டுமே கடைபிடிக்க வேண்டும்.
அவரது முன்னாள் மனைவியைத் தூற்றுவதோ, தேவையற்ற விரும்பத்தகாத விசயங்களைப் பரப்புவதையோ தவிர்த்துக் கொள்வோம்.
இந்த சூழ்நிலையில் இருவருக்குமே கடினமான முடிவை எடுத்துப் பிரிந்திருக்கும் இருவருடனும் நாம் மனதால் இணைந்திருப்போம்.
எத்தனை எளிதாக எழுதிவிட்டாலும், மனம் வலி கொள்வதை மறுப்பதற்கில்லை இதுவும் மாறும் அனைத்தும் ஆறும்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
Post a Comment