பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி விசேட உரை - அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தையும் சமர்ப்பிக்கிறார்
10ஆவது பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு கூடவுள்ளது. இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.
2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசியப் பட்டியல் மூலம் அந்தந்த கட்சிகளால் பரிந்துரை செய்யப்படும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதோடு சபாநாயகர் தெரிவு, எம். பிக்களின் பதவிப்பிரமாண நிகழ்வும் இடம்பெறும்.
இந்த ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பி.ப. 3.00 மணிக்கு விசேட உரை நிகழ்த்தி, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.
Post a Comment