Header Ads



வவுனியா வைத்தியசாலையில் முதன் முறையாக


 வவுனியா  வைத்தியசாலையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை தாயொருவர் பிரசவித்துள்ளார். 


 வவுனியா - பதவியாவைச் சேர்ந்த தாயொருவரே நேற்றையதினம் இவ்வாறு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். 


அறுவை சிகிச்சை மூலம் இந்த நான்கு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டுள்ளனர். 


வவுனியா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.


குறித்த தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதுடன், நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.