Header Ads



கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்


களுத்துறையில் இன்று(10) பிற்பகல் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனமேடையில் கண்ணீர் விட்டழுதார்.


அங்கு அவர் உரையாற்றும்போது, எரிவாயு சிலிண்டரை தோற்கடித்துவிட்டு, பதினொராம் இலக்கத்தை தோற்கடித்துவிட்டு ரோஹித அபேகுணவர்தன அமைச்சராக மாட்டார் என்பது இங்குள்ள மக்களுக்கு தெரியும்.


நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் என்பது அவர்களுக்குத் தெரியும். அதையறிந்து நான் இங்கு எனது நன்றியை தெரிவிக்கவே வந்தேன் என்று கூறி முன்னாள் அமைச்சர் கண்ணீர் விட்டழுதார்.


பொதுக்கூட்டத்தில் வந்த மக்களிடம் நான் தனிப்பட்ட முறையில் எனக்கு வாக்களிக்குமாறு கோரவில்லை. நான் அவர்களை தனிப்பட்ட முறையில் பாரக்கவில்லை நான் மக்களுடன் இருந்தேன். எதிர்க்கட்சி உறுப்பினராக உங்களுடன் தொடர்ந்து இருப்பேன்.


மீனுக்கு தண்ணீர் வேண்டும், இராணுவ வீரனுக்கு ஆயுதம் வேண்டும். மேலும் அரசியல்வாதிக்கு மக்கள் தேவை. அரசாங்கம் இல்லாவிட்டாலும் 32 வருடங்கள் என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவீர்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். விரக்தியால் அரசியலை விட்டு விலக மாட்டேன். மலை ஏறினால் வீழ்ச்சி ஏற்படும் எனவும் நீண்ட தூரம் நீச்சல் அடித்தாலும் மீளவும் இங்குதான் வரவேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.