உயிரற்ற சடப்பொருட்கள், பேச ஆரம்பித்தால்..?
கடல்: நான் ஆள் பறிக்கும் துரோகி அல்ல நீங்கள் தான் என் ஆழ்மனதில் நுழைந்தீர்கள்.
வானம்: நான் உயரத்தில் தான் இருக்கிறேன். ஆனால் நீங்கள் எனக்கு சமீபத்தில் இருக்கிறீர்கள்.
பூமி: நீங்கள் என்னதான் செய்தாலும் என்னிடம் தான் மீண்டு வர வேண்டும்
காடு: என்னை நீங்கள் அழிக்க வந்தால் நான் ஆவியாக வந்து உங்களை அழிப்பேன்.
மலை: நானே நிமிர்த்து நிற்கிறேன். ஏன் உங்களால் நிமிர்ந்து நிற்க முடியாது!
நதி: நீங்கள் என்னை என் பாட்டில் ஓட விடாவிட்டால் நான் உங்கள் வீட்டினுள்ளே வருவேன்.
கல்: என் நெஞ்சம் கல்நெஞ்சம் அல்ல. என் நெஞ்சிலிருந்து நீர் ஊற்றுக்கள் வருகின்றன.
மரம்: நான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே கனி தருகிறேன், நிழல் தருகிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்.
சூரியன்: நான் உங்களுக்காக பகலெல்லாம் என்னையே சுட்டெரித்துக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் என்ன வென்றால் அந்த நிலாவுக்காக ஏங்கிக் கொண்டே இருக்கின்றீர்கள்.
இரவு: நான் அமைதியாக இருக்கிறேன் என்று தவறான நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
சுவர்: உங்கள் கதைகளை நானும் கேட்கிறேன், ஆனால் என்னைக் கேட்க யாரும் இல்லை.
பணம்: நான் உங்கள் வாழ்வை அழிக்க வில்லை. உங்கள் பேராசைதான் உங்களை அழித்தது.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment