பாராளுமன்ற முதல்வர் பிமல், ஆளும்கட்சி முதற்கோலாசான் நளிந்த உடனடியாக கடமைகளைப் பொறுப்பேற்றனர்
பாராளுமன்றத்தின் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க மற்றும் ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பாராளுமன்றத்தில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், சபை முதல்வரின் செயலாளர் ஜனகாந்த சில்வா, ஆளும் கட்சியின் முதற்கோலாசானின் பிரதம செயலாளர் ஜனக ஜயசுந்தர உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment