Header Ads



நிச்சயம் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய ஹக்கீம், றிசாத், முஜிபுர்


- தில்ஷாத் முஹம்மத் -


பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கின்றன. இம்முறை பாராளுமன்றத்திற்கு முஸ்லிம் வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடுகின்றனர். இதனை ஒரு நல்ல சகுனமாக பார்க்க முடியாது. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் சிதறி வாழ்கின்ற நிலையில் முஸ்லிம்களின் வாக்குகளும் சிதறி சின்னாபின்னமாகிவிடுமோ என்ற அச்சம் பொதுவாக எல்லோர் மனதிலும் இருக்கிறது. 


முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் சிதறி சின்னாபின்னமாகும் என்ற நிலை ஒரு பக்கம் இருந்தாலும், எமது முஸ்லிம்? வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரமும், சகபோட்டியாளர்களை விமர்சிக்கும் முறையும் மிக அநாகரிகமான, அருவெருக்கத்தக்க முறையில் அமைந்திருப்பது கவலையளிக்கிறது. 


ஆயிரமாயிரம் தேர்தல்களும், அரசியல் கட்சிகளும் அவ்வப்போது வந்து போகலாம். இவை எதுவும் நிரந்தமானதல்ல. இவைகள் அற்ப தேவைக்காக எம்மை நன்பர்களாக்கும். அதேபோன்று எதிரியாகவும் உறுவாக்கும். ஆனால் மன்னறையில் “உமது சகோதரர்கள் யார்” என்ற கேள்வி எம்மிடம் கேட்கப்படும் போது “முஸ்லிம்களே எனது சகோதரர்கள்” என்ற அந்த உறவை நாம் அற்ப விடயங்களுக்காக அறுத்தெறிந்துவிட தலைப்பட்டிருப்பது எவ்வளவு ஆபத்தானது! 


பண்பாடான ஒரு சமூகம் என ஒரு காலப்பகுதியில் போற்றப்பட்ட முஸ்லிம் சமூகம் இன்று மாற்று மத சகோதரர்கள் முன் வெட்கி தலைகுணிந்து நிற்கிறது. ஒழுக்கம், பண்பாடு, மூத்தவர்களை, ஆலிம்களை, கற்றறிந்தவர்களை, ஆசான்களை, பெற்றோர்களை மதிக்கின்ற, பண்பாடாக நடந்து கொள்கின்ற அழகிய  குணங்கள் இன்று முஸ்லிம் சமூகத்திடமிருந்து பிடுங்கி எறியப்பட்டிருப்பதாகவே உணர முடிகின்றது. 


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹகீம் இன்று எமது சமூகத்தவர்களில் ஒருசிலரால் மிக படுமோசமாக விமர்சிக்கப்படுவதை பார்க்கின்ற போது கவலையாக இருக்கிறது. ஒரு சிலர் தங்களது அனைத்து வளங்களையும் பயண்படுத்தி கௌரவ ரவூப் ஹகீமை மிகக் கேவலமாக விமர்சிப்பதும், எள்ளிநகையாடுவதுமே தங்களது மிகப் பெரிய கடமை என்று நினைத்து செயல்பாடுகிறார்கள். 


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும் விமர்சனங்களும், கோபமும் பல கோணங்களில் பலரிடமும் காணப்படலாம். அவர்கள் குறித்து நிதானமான தீர்மாணங்களை எடுப்பதற்கே அவ்வப்போது தேர்தல்கள் வருகின்றன. எமது வாக்குகளை மிகச் சரியாக பயண்படுத்தி எமது ஈமானிய உணர்வை பாதுகாத்துக் கொள்வதே ஒரு உண்மையான முஸ்லிமின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். 


கௌரவ ரவூப் ஹகீம் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியைக் காப்பாற்றுவதற்காகவே அவர் தன்னை தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் தேசிய அரசியல் முகவரியாக முஸ்லிம் கட்சியொன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை அன்றுணர்ந்த எம்.எச்.எம்.அஷரப் (ரஹிமஹ{ல்லாஹ்) “முஸ்லிம் காங்கிரஸ்” என்ற கட்சியை வளர்த்தெடுத்தார்கள். அக்கட்சி உட்பட காலான் போன்று முளைத்துள்ள ஏனைய முஸ்லிம் பெயர்தாங்கி கட்சிகளும் இன்றைய அரசியலுக்கும், நாட்டிற்கும் அவசியமா? இல்லையா? ஏன்பதை முஸ்லிம்கள் அவ்வப்போது வருகின்ற தேர்தல்களில் தீரமானித்தாலே போதும். 


ரவூப் ஹகீம், எனக்கும் உங்களுக்கும் சிலபோது கசக்கலாம். அவரது செயல்பாடுகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கலாம். ஆனால் அவரை விமர்சிக்கவும், கேவலமாக பேசவும் எனக்கும் உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. மனிதர்களிடம் குறைகள், தவருகள் நிறைய இருக்கலாம். இவை சமூகம் சார்ந்தவையாகவோ, தனிப்பட்டதாகவோ கூட இருக்கலாம். அவற்றிற்கு அவர்களே பொறுப்பாளிகள். நாங்கள் நீதிபதிகளாக முடியாது. 


முன்னால் பாராளுமன்ற உருப்பினர்களான ரவூப் ஹகீம், முஜிபுர் ரஹமான், ரிஷாத் பதியுதீன் போன்றோர் விமர்சனங்களுக்கு அப்பால், பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று முஸ்லிம் புத்திஜீவிகள் சமூகம் எதிர்பார்க்கின்றது. கௌரவ ரவூப் ஹகீம் என்ற பன்முக ஆளுமையின் அவசியம், எனக்கும் உங்களுக்கு தேவைப்படாதிருக்கலாம், ஆனால் இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் அக்கரையுள்ள சர்வதேச சமூகம், இலங்கை முஸ்லிம்கள் சார்பான தலைமைத்துவத்திற்கு ரவுப் ஹகீமின் குரல் கட்டாயத்தேவை என்றே கருதுகிறது. 


ரவூப் ஹகீம் ஒரு சிறந்த அரசியல்வாதி. முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்ற மாற்றம், தேவை சிலபோது அவரால் நடந்திருக்காது. ஆனால் மிகத் தெளிவாக ஒன்றை இலங்கை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு தேசிய ரீதியில் ஏற்பட்ட அவமானமும், அபகீர்த்தியும் கௌரவ ரவூப் ஹகீமினால் இன்றுவரை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படவில்லை. அவ்வாரு ஏற்படாதிருக்க வேண்டும் என்பதில் அவர் மிகக் கவனமாக நடந்து கொள்கிறார். 


பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயண்படுத்தி எமது பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் சமூகத்தை தலைகுணிய வைத்த சம்பவங்கள் ஏராளம். அரச நிதியைப் பயண்படுத்தி தாம் அதிகாரத்தில் இருக்கின்ற காலப்பகுதியல் கட்டப்பட்ட கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், பொது அரங்குகள் என பல செயல்திட்டங்களுக்கு தங்களது பெயரைச் சூட்டி அழகுபார்த்ததைப் போன்ற கீழ்த்தரமான வேலையை கௌரவ ரவூப் ஹகீம் அவர்கள் செய்ததில்லை. 


எமது முன்னோர்களின் அரசியல் வரலாற்றை பார்க்கின்ற போது அவர்கள் சமூகத்திற்காக ஆற்றிய சேவைகளும், தியாகங்களும், வாரி வழங்கியவைகளும் இன்றும் எம்மை மெய்சிலிர்;;க்க வைக்கின்றன. ஆனால் அவர்களது மரணத்திற்கு பின்னரே சமூகம் அவர் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக அவர்களது பெயர்களை கட்டிடங்களுக்கும், பாதைகளுக்கும், அரங்கங்களுக்கும் இட்டு அழகுபார்ப்பதை அவதானிக்க முடிகிறது. (இதில் சில விதிவலக்குகளும் இருக்கலாம்) 


ரவூப் ஹகீம் செல்கின்ற இடங்களில் அவருக்கெதரிராக மிக கீழ்த்தரமாக ஒரு சிலர், தனிப்பட்ட சிலரது தேவைக்காக நடந்து கொள்வதையும், செயல்படுவதையும் காணமுடிகிறது. 


வளர்த்த கடாக்கள் மார்பில் மோதுவது போல், அத்தனை இழிசொற்களையும் மிக நிதானமாக, பொறுமையாக உள்வாங்கும் பண்பும், பணிவும் அவரது அறிவின் முதிர்ச்சியையும், ஆளுமையின் ஆலத்தையும் காட்டுகிறது. கௌரவ ரவூப் ஹகீம் அவர்கள் சமூகத்தை விற்று, அரசியல் வியாபாரம் செய்து பாராளுமன்றம் சென்று தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்ற தேவையும் அவருக்கு இல்லை என்பதை காழ்ப்பணர்வோடு கதையளப்பவர்கள் புரிந்து கொள்ளும் காலம் மிகத் தொலைவில் இல்லை.


பழுத்த அரசியல் அனுபவமும், அறிவும், ஆற்றலும், சமூக சிந்தனையும் கொண்ட இவர் போன்றவர்கள் பாராளுமன்றத்தில் இல்லாதிருக்கும் போது, எதிர்காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் தனிநபர், அரச, எதிர்தரப்பு பிரேரணைகளின் ஆள, அகலத்தை அறிந்து, தூர நோக்கோடு செயல்படவும், தீர்மாணங்களை எடுக்கவும் இருக்கும், தலைமையை முஸ்லிம் சமூகம் இழக்கும் என்பதில் ஐயமில்லை.


இலங்கை முஸ்லிம்களின் இன்றைய சாபக்கேட்டிற்கு, முஸ்லிம்களை பிரதிநித்துவப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளே முக்கிய காரணமாகும். இவ்வாரான கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளும் அதன் முக்கிய உறுப்பினர்களும் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் கௌரவ ரவூப் ஹகீமிற்கு கிடைக்கும் அங்கீகாரத்தையும், நன்மதிப்பையும் ஜீரணிக்க முடியாமையின் காரணமாகவே, அற்ப அரசியல் இலாபத்திற்காக சேறுபூசும் வேலையை செய்கின்றனர்.


ரவூப் ஹகீமின் அரசியல் வாழ்வு இவ்வளவு விமர்சிக்கப்படுவதற்கான முக்கிய காரணம், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் காப்பாற்றுவதற்கு போனதன் விளைவே என பொதுவாக கருதப்படுகிறது.


ஒருவேளை தனது அரசியல் வாழ்வை ஒருகாலத்தில் முஸ்லிம்களின் நன்மதிப்பை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தொடர்ந்திருந்தால் அவரது அறிவிற்கும், ஆளுமைக்கும் மறைந்த ஏ.சீ.எஸ்.ஹமீதின் இடத்தை நிரப்பும் அளவிற்கு கட்சி அந்தஸ்த்தும், அரசியல், சமூக அங்கீகாரமும் கிடைத்திருக்கலாம்.


ரவூப் ஹகீம் இம்முறை பாராளுமன்றம் செல்ல வேண்டுமா? இல்லையா? என்பதை தீர்மாணிக்கும் உரிமையும் கடமையும் அவர் போட்டியிடும் கண்டி மாவட்ட வாக்காளர்களுக்கே உரியது. எனினும் கௌரவ ரவூப் ஹகீம் பாராளுமன்றம் செல்வாதால் தேசிய ரீதியான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த பெருமை கண்டி மாவட்ட மக்களுக்கு உண்டாகும் அதேவேளை, அவரது குரல் தேசிய ரீதியானதாக அமையும் என்பதும் உறுதியே.

 

எனவே அற்ப அரசியல் நிகழ்ச்சி நிரலலுக்கு அடிமையாகி நாம் எமது தனித்துவத்தை இழக்காதிருப்போம்.


No comments

Powered by Blogger.