Header Ads



கடன்தான்...


கடன்கள், காசு பணமாக மாத்திரம் தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 


உள்ளம் உடைந்து போன நேரங்களில் நம்மை தேற்றும் ஒர் கனிவான வாரத்தையும் கடன்தான். 


துக்கமான தருணத்தில் கிடைக்கும் ஆறுதலும் ஒரு கடன்தான். 


ஆதரவற்ற நேரத்தில் கிடைக்கும் ஆதரவும் ஒரு கடன்தான். 


வழி தெரியாமல் விழி பிதுங்கிய நேரத்தில் கிடைக்கும் வழிகாட்டலும் ஒரு கடன்தான். 


சோகமான நேரத்தில் கிடைக்கும் அரவணைப்பும் ஒரு கடன்தான். 


விழுந்து கிடக்கும் நேரத்தில் தோளுக்கு கிடைக்கும் தட்டலும் ஒரு கடன்தான். 


இவைகள் கட்டாயம் கட்டப்பட வேண்டிய கடன்கள் அல்ல என்றாலும் கட்டாயம் மறக்கக் கூடாத கடன்களாகும். 


- Imran Farook -


No comments

Powered by Blogger.