அரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் உருவப்படம் தொங்கப்படவில்லையா..? ஏன்..??
வரலாற்றில் முக்கியமான மாற்றத்திற்கு கிழக்கு மாகாணம் தயாராகி வருவதாகவும், கருணா - பிள்ளையான் யார் வந்தாலும் இதனை தடுக்க முடியாது எனவும், தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மட்டக்களப்பில் பழைய அரசியல்வாதிகள் பழைய கதைகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
அநுரகுமாரவை தெரியும் என இங்குள்ள அரசியல் தலைமைகள் கூறினாலும், அரசாங்கத்தில் அவர்களுக்கு இடமில்லை. குறிப்பாக மட்டக்களப்பில் பிள்ளையானின் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது.
மேலும், அரசு சலுகைகளை பாவித்தே ரணில் விக்ரமசிங்க பிரசாரம் செய்து கொண்டார்.
அவ்வாறே சஜித் பிரேமதாசவும், பிரசார செயலை முன்னெடுத்திருந்தார்.
அவர்கள் ஆட்சி அமைக்க முடியாத காரணத்தால் மக்கள் மத்தியில் எங்களைப் பற்றி ஒரு பயத்தை உருவாக்கியிருந்தனர்.
ஜோன்சன் பெர்னான்டோ, லொஹான் ரத்வத்த போன்றோருக்கு, அதிகாரத்தின் மூலம் இனிமேல் களவாட முடியாது.
அவர்கள் நீதிக்கு முன்னால் வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இது ஆரம்பம் மாத்திரம்தான்.
அரச காரியாலயங்களில் ஜனாதிபதியின் உருவப்படம் பொறித்த புகைப்படங்கள் அமைந்திருக்கும்.
தற்போது எவருடைய படமும் இல்லை, கிரம உத்தியோகஸ்த்தர் காரியாலயம் தொடக்கம் உயர் நீதிமன்றம் வரை ஜனாதிபதிகளின் படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.
இப்போது அவ்வாறு படங்கள் இல்லை என்பதற்கான காரணங்கள் என்ன? அரச ஊழியர்களுக்கு அரசாங்க தலையீடு இனி இல்லை என்பதை அறிவிப்பதே.
நீண்ட காலத்துக்கு பின்னர் நிதானமான ஒரு நம்பிக்கையான சூழல் உருவாகி இருக்கின்றது’’ என்றார்.
Post a Comment