Header Ads



பாராளுமன்ற பெரும்பான்மையை தந்து, அரசாங்கத்தை அமைக்க உதவுமாறு சஜித் கோரிக்கை


எமது நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டனர், தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று பொய்யான வாக்குறுதிகளாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


சாதாரண மக்களை பிரதிநிதித்துவப்படுவதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்ததும், நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து சலுகைகளையும் பொது மக்கள் வழங்குவார் என மக்கள் எதிர்பார்த்தும் இன்று மக்கள் எதிர்நோக்கி வரும் அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்காது இருந்து வருகிறார். பொருட்களின் விலை, எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம், வரி போன்றவற்றைக் குறைக்கப் போவதாகச் சொன்னாலும் எதுவும் நடந்த பாடில்லை. நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் இவை அனைத்தையும் செய்ய முடியும். ஆனால் அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்காது இருந்து வருகிறார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


வரி குறைப்பதாகக் கூறி ஜனாதிபதி தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட்டு சர்வதேச நாணய நிதியத்தின் கைதியாக மாறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுத் தந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு பலத்தை வழங்குமாறும் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.


2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு வட கொழும்பு பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று நேற்று (07) ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சி.வை.பீ. ராம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.