Header Ads



இலங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா..?


உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் வெளியான கட்டுரை ஒன்று தவறான விபரத்தை வழங்குவதாக தெரிவித்த இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் முயற்சி குறித்த சமீபத்திய அறிக்கைகளை தெளிவுபடுத்தியுள்ளது.


இலங்கையின் விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் உள்ளதுடன், ரஷ்ய பிரிக்ஸ் தலைமைத்துவம் இலங்கையின் ஆர்வத்தை வரவேற்றுள்ளது என தூதரகம் தெரிவித்துள்ளது.


விண்ணப்பம், பிரிக்ஸ் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து மூலம் பரிசீலிக்கப்படும் எனவும் இலங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் தவறானவை என தூதரகம் வலியுறுத்தியுள்ளது

No comments

Powered by Blogger.