Header Ads



வலியும் வேதனையும் இருக்காது என்பது நமக்கு ஆசுவாசமாக இருக்கும் அல்லவா...!




 உங்கள் பற்களில் ஒன்று தாங்க முடியாத அளவுக்கு வலிக்க ஆரம்பிக்கும் போது என்ன செய்வீர்கள்? எப்படியாவது அதை கழட்டி வீச வேண்டும் என்பதில் தானே உங்கள் முழுக்கவனமும் இருக்கும். 


சரி, அப்படித்தான் கழட்டி வீசினால் கூட உங்கள் நாக்கு தானாகவே அது இருந்த இடத்தை தேடிச்செல்லும் அல்லவா.!


அதவாது, புரியும் படி சொல்வதென்றால், இருந்துவிட்டு இழந்தை நீங்கள் மிகுந்த ஏக்கத்துடன் தேட ஆரம்பிப்பீர்கள். 


நம்மோடு இருந்த ஒன்று பிரிந்து போன பின்னர் நாம் தேடிப் பார்ப்பது இயல்புதான். 


அதை நாம் மறக்க சில காலம் எடுக்கலாம். ஆனால் எப்படியோ காலப்போக்கில் மறந்து விடுவோம். 


சரி, அந்தப் பல்லை நீங்கள் கழட்டித்தான் ஆக வேண்டுமா? என உங்களை நீங்களே கேட்டுக் கொண்டால், மறுப்பேதுமின்றி உங்கள் ஆழ்மனம்  "ஆம்" என்று மாத்திரமே பதிலளிக்கும். காரணம், அது உங்களுக்கு தீராத வலியைத் தந்து கொண்டிருந்தது, என்பதாகும். 


இப்படித்தான் நம் வாழ்வில் சில மனிதர்களின் நிலையும். சில சமயங்களில் அவர்களை கழட்டிவிட்டு நம் பயணத்தை தொடர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. 


என்றோ ஒரு நாள் அவர்கள் நமக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கலாம். அவர்கள் இல்லாமல் போன பின்னர் ஒரு இடைவெளி வந்துவிடும் தான். ஆனாலும்  வலியும் வேதனையும் இருக்காது என்பது நமக்கு ஆசுவாசமாக இருக்கும் அல்லவா...!


✍ தமிழாக்கம் /  imran farook

No comments

Powered by Blogger.