ஒரு முஃதஸமாவது இல்லையே..!
பெண்களின் கதறல்கள்...!
குழந்தைகளின் ஓலங்கள்...!
கேட்க, பார்க்க ஒரு முஃதஸம் இல்லையே...!
அன்றொரு நாள் அப்பாஸிய
பேரரசின் எட்டாவது மாமன்னர் முஃதஸம் அவர்கள் அன்றைய ஈராக் தலைநகரான சாமாராவில் உள்ள தனது அரசவையில் கம்பீரமாக வீற்றிருந்தார்.
அப்போது அங்கே வந்த சிலர் : 'நாங்கள் பீஷன்தீனியாவிலிருந்து தப்பித்து ஒடி வருவதாகவும், பீஷன்தீனிய அரசன் தியோஃபில் ஜபத்ரா நகரில் புகுந்து தாக்கியதாகவும், "ஷராரா" என்ற முஸ்லிம் பெண்ணை சிறைபிடித்து இழுத்துச் செல்வதாகவும், அவள் இழுத்துச் செல்லப்படும் போது (வ'அமுஃஅதஸமாஹ்) முஃஅதஸமே, என்னை காப்பாற்றங்கள்! என்று கத்திக்கொண்டு செல்வதை தாங்கள் கேட்டதாகவும், மன்னர் முஃதஸமிடம் கூறுகின்றார்கள்.
கையிலிருந்த தண்ணீர் குவளையில் பாதியை குடித்திருந்த மன்னர், மீதியை கீழே வைத்தார். எழுந்து நிற்கிறார்,
யாரென்று தெரியாத அவளை காப்பாற்ற 90,000 போர் வீரர்கள் கொண்ட ஒரு பெரும் படையை தயார் செய்ய உத்தரவு பிறப்பிக்கிறார். குடித்த குவளையின் மீதி தண்ணீரை அப்படியே வைக்கும் படியும், அப்பெண்ணை மீட்டெடுத்து வந்ததும் குடிப்பதாகவும் சேவகர்களுக்கு பணிக்கிறார்.
தானே படைக்கு தலைமை தாங்கி 1,740 கிலோமீட்டர்கள் தூரத்தை கடந்து செல்கிறார். போகும் வழியில் அகப்பட்ட ஊர்களை எல்லாம் வெற்றி கொள்கிறார். அதில் இன்றைய துருக்கியின் அன்கரா நகரும் வெற்றி கொள்ளப்படுகிறது.
கடும் மோதலுக்குப் பிறகு பீஷன்தீனய படைகளை பணிய வைக்கிறார். சக்கரவர்த்தி தியோஃபில்க்கு அதிர்ச்சித் தோல்வி கெடுக்கிறார். தானே
சிறைச்சாலை சாவியை வாங்கியெடுத்து அப்பெண்ணை விடுவிக்கிறார். "நீ எழுப்பிய உதவிக் குரலுக்கு நான் விடையளித்து விட்டேனா?" என்று கேட்கிறார். பின்னர் மனநிம்மதி அடைகிகிறார்.
முஃதஸம் வீரத்தின் அடையாளம், பேராண்மையின் சின்னம். சாம்ராஜ்யத்தின் அடுத்த தொங்களில் ஒலித்த ஒரு பெண்ணின் உதவிக் குரலுக்காக இப்படித்தான் ஒரு காலம் பதில் அளிக்கப்பட்டது. அது நம் முன்னோர்கள் கெளரவமாக வாழ்ந்த பொற்காலம், நம் மன்னர்கள் வீரசூரர்களாக திகழ்ந்த தசாப்தம்.
இப்போதும் பாலஸ்தீன மண்ணிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்களின் கதறல்களும், சிறுவர்களின் ஓலங்களும் உலகமெல்லாம் கேட்கத்தான் செய்கின்றன, ஆனால் அதை காது கொடுத்து கேட்க ஒரு முஃதஸமாவது இல்லையே!
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment