Header Ads



அறுகம்பே சம்பவம், ட்ரம்ப் கொலை முயற்சி - ஈரான் வௌியிட்ட முக்கிய விடயம்


டொனால்ட் ட்ரம்பைக் கொல்லும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாக  குற்றம் சாட்டப்பட்ட பர்ஹாத் ஷகேரி தொடர்பில் ஈரானின் வெளியுறவு அமைச்சு விளக்கமளித்துள்ளது


இதன்படி, டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சியில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வௌியான குற்றச்சாட்டை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி மறுத்துள்ளார்.


எதிரெதிர் சித்தாந்தங்களைக் கொண்ட இரு நாடுகளுக்குமிடையில் நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளளுமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுப்பதாக ஈரான் வெளிவிவகார மேலும் தெரிவித்துள்ளார்.


தனது 'X' தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


தற்போது புதிய காட்சியை உருவாக்கி அதனூடாக மூன்றாம் தர நகைச்சுவையை உருவாக்க சில தரப்பினர் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க மக்கள் தமது முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான அவர்களின் உரிமையை தாம் மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


ஈரான் அணுவாயுதத்தின் பின்னால் செல்லும் காலத்தில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி மேலும் கூறியுள்ளதாவது, நம்பிக்கையை கட்டியெழுப்புவது இரு தரப்புக்கும் இன்றியமையாத விடயம் எனவும் அது ஒற்றைப் பாதையல்ல எனவும் தெரிவித்துள்ளார்.


ஈரான் புரட்சிகர காவலர் படையின் உறுப்பினரான பர்ஹாத் ஷகேரியால் டொனால்ட் ட்ரம்பை கொல்ல திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.


இந்த நாட்டில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து அறுகம்பே தாக்குதலை அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்திருந்தது.


பாரிய அளவிலான ஹெராயின் கடத்தல் தொடர்பாக ஷகேரி 2019ஆம் ஆண்டில் இலங்கையில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஆப்கானிஸ்தான் நாட்டவர் என்றும் தற்போது ஈரானில் தங்கியிருப்பதாகவும் அமெரிக்க நீதித்துறை குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.