Header Ads



பல பகுதிகளில், வெள்ள அபாய எச்சரிக்கை (முழு விபரம்)


வங்காள விரிகுடாவில் தற்போது ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் அடுத்த சில நாட்களில் ஏற்படக்கூடிய அதன் அடுத்தகட்ட முன்னேற்றம் காரணமாக 2024 நவம்பர் 25 முதல் நவம்பர் 28 வரை பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


மல்வத்து, கலா ஓயா, கனகராயனாறு, பறங்கி ஆறு, மா ஓயா, யான் ஓயா, மஹாவலி கங்கை, மாதுரு ஓயா, கல் ஓயா, ஹெடா ஓயா, முந்தேனியாறு மற்றும் விலா ஓயா படுகைகள், போன்ற தாழ்வான மற்றும் ஆற்றுப் படுக்கைகளில் வெள்ளப்பெருக்கு அபாய நிலைமைகள் ஏற்படக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பயணிகள் நவம்பர் 25 முதல் நவம்பர் 28 வரை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

இதனிடையே, நவம்பர் 25க்குள் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, தென்மேற்கு வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.