முஸ்லிம் நியமன புறக்கணிப்பு, வெளிநாட்டு தூதரகங்கள் கரிசனை
(உதயம் பத்திரிகை)
அமைச்சரவையிலோ, செயலாளர் நியமனத்திலோ முஸ்லிம்கள் நியமிக்கப்படாமை குறித்து இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் கரிசனை காட்டியுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில், சில வெளிநாட்டு தூதரகங்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை கோரியுள்ளதாகவும் இந் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
Post a Comment